Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஒருவேளை சாப்பாடு கெட்டுப்போனதா இருக்குமோ… இரு குழந்தைகள் மரணித்த சம்பவம்… கதறி அழுத பெற்றோர்… நெஞ்சை உலுக்கும் காட்சி…!!

ஒரே நாளில் அண்ணன் தங்கை இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் என்ற பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிகள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஹோட்டலுக்கு சென்று வேலை பார்த்து விட்டு மதிய நேரத்தில் சந்தோஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மயக்க நிலையில் தனது மகன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவருடைய மகள் பிரியங்காவிற்கு நள்ளிரவு நேரத்தில் திடீரென வாந்தி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பிரியங்காவும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வேலம்பாளையம் போலீசார் இரு குழந்தைகளின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் தங்களுடைய மகன், மகள் இறந்த துக்கத்தில் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் அனைவரின் மனதையும் உருக வைத்தது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த குழந்தைகள் சாப்பிட்ட உணவு கெட்டுப்போனதாக இருந்திருக்குமோ என்ற என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் குழந்தைகள் இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |