ஜெர்மனியில் நாட்டின் நலனுக்காக ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது .
உலகம் முழுவதும் கொரோனா பரவலால் நாம் ஊரடங்கில் இருந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் கொரோனா பாதிப்பால் மார்ச் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கலுக்கும்,16 கூட்டாட்சி மாநிலங்களின் தலைவர்களுக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் ஊரடங்கு விதிகளை தளர்த்துவது குறித்து பேசுவதாகவும் வரும் பிப்ரவரி 14 வரை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை சில தளர்வுகளுடன் மார்ச் 14-ஆம் தேதி வரை நீட்டிக்க போவதாகவும் தெரியப்படுகிறது .மேலும் நாட்டின் தொடக்க பள்ளிகள், நர்சரிகள் , சலூன்கள் மற்றும் கடைகளுக்கு தளர்வுகள் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில மாநில தலைவர்கள் ஊரடங்கை எளிதாக்குவதற்கான கால அட்டவணையை அமைக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.