Categories
தேனி மாவட்ட செய்திகள்

என் கணவர் தூங்கிட்டாரு வா…! இரவில் வந்த ”அந்த” சத்தம்… கண்டதும் அதிர்ச்சியான குடும்பத்தார் …!!

தேனியில் கணவனை கொலை செய்ய உடந்தையாக இருந்த மனைவி மற்றும் கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி அருகே இருக்கும் கோட்டூர் அரசமர தெருவை சேர்ந்த ராஜேஷ் கண்ணன். 44வயதுடைய இவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்து அங்குள்ள மக்களை நடுங்க வைத்துள்ளது. இவர் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி மணிமேகளை. 40வயதான மனைவி, 14வயதில் விஜய் மூர்த்தி என்ற மகன்,  9வயதில் காமேஸ்வரன் என்ற மகன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மனைவி  மணிமேகலைக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கணவர் ராஜேஷ் கண்ணன் மனைவியின் காதல் விவகாரம் குறித்து கண்டித்து உள்ளார். கணவனின் பேச்சை கேட்காமல் மணிமேகலை அடிக்கடி தன் காதலன் மலைசாமியை சந்தித்துள்ளார்.43வயது மலைச்சாமியால் கணவன் – மனைவி இருவருக்கிடையே  அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்காக தன் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

சம்பவ நாளான நேற்று முன்தினம் இரவு ராஜேஷ் கண்ணன் மாட்டுக் கொட்டகையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது தன் காதலன் மலைசாமியை வரவழைத்துள்ளார். மலைச்சாமி ராஜேஷ் கண்ணனின்  தலையில் அம்மிக்கல்லை போட்டுள்ளார். வலியால் துடித்த ராஜேஷ் கண்ணனின் அலறல் சத்தம் கேட்டு அவரது தம்பி கதிரவன் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் ராஜேஷ் கண்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கதிரவன் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீஸ் விசாரணையில் மலைச்சாமி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டார். அதற்கு துணையாக இருந்த மணிமேகலையயும் போலீஸ் கைது செய்தது. மேலும் இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

Categories

Tech |