ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் தேவை என சில்லறை வியாபாரிகள் பிப்-26 பாரத் பந்த் அறிவித்துள்ளனர்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு எதிராக அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பு பிப்ரவரி 26ஆம் தேதியன்று பாரத் பந்த் அறிவித்துள்ளது. சில்லறை வணிகர்களுக்கு ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ள மோசமான அம்சங்களால் மிகவும் சிக்கலாகி உள்ளதால் நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் தேவை என வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு போக்குவரத்து நலச் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.