Categories
இந்திய சினிமா சினிமா

ஆபாச படம் எடுத்து…. சம்பாதித்த நடிகை – திடுக்கிடும் தகவல்…!!

நடிகை கெஹனா இதுவரை 87 ஆபாச படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் தனி பங்களாவில் இளம்பெண்களை வைத்து ஆபாச படங்கள் எடுத்து சம்பாதிப்பதாக நடிகை கெஹனா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சினிமா வாய்ப்பின்றி கஷ்டப்படும் நடிகைகளிடம், சினிமாவில் நடிக்க புதுமுக நடிகைகள் தேவை என்று ஆசை வார்த்தை கூறி, சாதுரியமாகப் பேசி ஆபாச படங்களில் நடிக்க வைத்துள்ளார். மேலும் அதை பார்க்க ரூபாய் 2000 வரை கட்டணமும் வசூலித்து உள்ளார்.

அவர்களுக்கு சம்பளமாக ரூபாய் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கொடுத்துள்ளதாகவும், இதுவரையிலும் 87 ஆபாச படங்கள் எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |