ஆஸ்திரியா பொறுப்பின்றி நடந்து கொள்வதால் அதனுடனான தங்களின் எல்லைகளை மூடுவதாக ஜெர்மன் தெரிவித்துள்ளது.
CSU என்ற கட்சியின் பொதுச்செயலாளர் Markus Blume பக்கத்து நாடான ஆஸ்திரியா பொறுப்பின்றி செயல்பட்டுவருவதாகவும் அதனுடனான தங்களின் எல்லைகளை மூட திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரியா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியிருக்கிறது. இதன் காரணமாகவே ஜெர்மனி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மார்க்கஸ் ப்ளூம் கூறியுள்ளதாவது, கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் இந்த சமயத்தில் ஆஸ்திரியா பொது ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
இது தான் பொறுப்பின்றி நடந்துகொள்ளும் செயலாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் தற்போது பரவிவரும் கொரோனா தொற்று எல்லைகளின் மூலமாக ஜெர்மனியில் நுழைவதற்கு விடமாட்டோம் என்று கூறியுள்ளார். எனவே தற்போது இந்த எல்லை கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் இந்த செயல்பாடானது மிக முக்கியமானது மற்றும் நன்மை அளிக்கக் கூடியது என்று கூறியுள்ளார்.