உதகை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த நொண்டிமேடு பகுதியில் வசித்துவருபவர் உமா. இவருக்கும் இவரது கணவருக்கும் அடிக்கடி ஏற்பட்டுவந்த பிரச்சனையின் காரணமாக கணவரை பிரிந்து, தனது 2வது மகன் அபிஷேக்குடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மூத்த மகன் உமாசங்கர் கோவையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இரவு பணியை முடித்துவிட்டு வீடுதிரும்பிய அபிஷேக் வீட்டின் படுக்கை அறையில் தன் தாயார் கழுத்து அறுப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இத்தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.