திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பேசிய போது, தமிழகத்திலே அம்மா அரசு எடுத்த நடவடிக்கை பெண்கள் முன்னேற்றம் எந்தளவிற்கு பயனளிக்கிறது என்பது பெருமைபட வைக்கிறது. பெண்கள் நாட்டின் கண்கள். பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம், அந்த சக்தி அவர்களிடத்தில் இருக்கின்றது. ஒரு குடும்பத்திலே குடும்பத்தலைவி எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகின்றார்களோ அந்த அளவுக்கு அந்த குடும்பம் ஏற்றம் பெறும். ஆகவே தான் புரட்சி தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தாங்க.
ஆகவே இன்று பெண்களுடைய முன்னேற்றம்தான் நாட்டினுடைய முன்னேற்றம். அதற்கெல்லாம் எங்களுடைய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து பெண்களின் வளர்ச்சிக்காகவும், பெண்களுடைய பொருளாதாரம் ஏற்றம் பெற, தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டு இருக்கின்றது. டாக்டர் முத்துலட்சுமி வரைக்கு மகப்பேறு நிதிஉதவி திட்டம் முதலில் 6000திலிருந்து 12,000மாக கொடுத்தோம். இப்போ 18,000மாக கொடுக்கின்றோம்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கும் உதவித்தொகை 12,000போதாது என்று பெண்களிடம் இருந்து கோரிக்கை வந்ததும் 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 12,000த்தை 18,000மாக உயர்த்துறோம் என அம்மா சொன்னார்கள் இன்றைக்கு கொடுத்து கொண்டு இருக்கின்றோம். தமிழ்நாட்டுல இதுவரைக்கும் 67லட்சம் கர்ப்பிணி தாய்மார்கள் இதன் மூலமாக பயன்பெற்றுள்ளார்கள். 1லட்சம்… 2லட்சம்…. இல்லைங்க… 67லட்சம் கர்ப்பிணி தாய்மார்கள் இத்திட்டத்தின் வாயிலாக உதவி பெற்று இருக்கின்றார்கள்.
இன்றைக்கு அம்மாவுடைய அரசு தாய்மார்களுக்கு இன்னும் ஏராளமான திட்டத்தை கொடுத்துள்ளது.கர்ப்பிணி தாய்மார்கள் பெற்று இருக்கின்ற குழந்தை பலமொடு, செழிப்போடு, சுகாதாரமாக வாழ வேண்டும் என்பதற்காக 16வகையான பொருளை உள்ளடக்கிய அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் கொடுக்கின்றோம். இதுவரை 25லட்சம் தாய்மார்ளின் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தை நாங்கள் கொடுத்துள்ளோம்.
கருவுற்ற தாய்மார்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சித்த மருந்து அடங்கிய அம்மா மகப்பேறு சஞ்சீவீ பெட்டகம் 1.7கோடி தாய்மார்களிடம் கொடுத்துள்ளோம். இதெல்லாம் பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து, குழந்தை பெறுகின்ற காலம் வரை அவர்கள் சிறப்பாக குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை அமல்படுத்தி, செயல்படுத்திய அரசு அம்மாவுடைய அரசு. இன்றைக்கு பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்றால் கோவையும், சென்னையும் தான் என்ற அளவுக்கு நிர்வாக திறமைமிக்க அரசு என்பதை நாம் நிரூபித்துக் காட்டிக்கொண்டு இருக்கின்றோம்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை வேரறுக்க இந்திய தண்டனை சட்டத்தில் கடுமையான தண்டனை முன்மொழியப்பட்டு இருக்கின்றன. ஆகவே பெண்களுடைய பாதுகாப்புக்காக எங்களுடைய அரசு தொடர்ந்து இவ்வளவு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவிக்கிறேன்… ஏன் ? இவ்வளவு சொல்றேன் என்றால் இங்கே பெண்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
ஆகவே பெண்களுக்கு என்னென்ன திட்டத்தை எங்களுடைய அரசு செயல்படுத்துகிற விவரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால் இந்த செய்தியை எல்லாம் உங்களிடம் தெரிவித்துள்ளேன். இது உங்களுடைய அரசு, மக்களுடைய அரசு, மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு அம்மாவின் அரசு.
இந்திய நாட்டில் எத்தனையோ முதலமைச்சர் இருக்காங்க. 2011 சட்டமன்ற தேர்தலில் அம்மா குறிப்பிட்ட ங்க… நான் முதலமைச்சர் ஆகியவுடன் இல்லதரசிகளின் சுமைகளை குறைக்க வேண்டும் என்பதற்க்காக விலையில்லா மிக்சி, விலையில்லா கிரைண்டர், மின்விசிறி வழங்குவேன் என சொன்னாங்க… அதே போல எல்லா குடும்பத்துக்கும் கொடுத்தாங்க. இப்படி கொடுத்த ஒரே முதலமைச்சர் நம்முடைய தாய் இதய புரட்சித்தலைவி அம்மா என முதல்வர் பெருமிதம் கொண்டார். முதல்வரின் இந்த பேச்சு பெண்களின் ஓட்டை மொத்தமாக அதிமுகவுக்கு செல்லும் என பலரும் கருதுவதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.