Categories
உலக செய்திகள்

பாப் பாடகியின் கருத்து… பார்படாஸுக்கு சென்ற கோவிட் தடுப்பூசிகள்… நன்றி தெரிவித்த பிரதமர்…!!

இந்தியா கொரோனா தடுப்பூசிகளை பாப் பாடகி ரிஹானாவின் சொந்த நாடான பார்படாஸுக்கு அனுப்பி வைத்துள்ளதால் அந்நாட்டுப் பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைநகரான டெல்லியின் எல்லைப் பகுதியில் தொடர் கனமழை, பனிப்பொழிவு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஹரியான, பஞ்சாப் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியும் அவை தோல்வியில் முடிந்ததால் வேளாண் சட்டங்களை திரும்ப பெறாமல் போராட்டத்தை கைவிடமாட்டோம் என விவசாயிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாப் பாடகி மியா கலிஃபா, கிரேட்டா, ரிஹானா ஆகியோர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இது இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் இருக்கும் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதனால் அக்க்ஷய்குமார், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோகித், அனில் கும்ப்ளே, சாய்னா நேவால் ஆசிய விளையாட்டு துறை மற்றும் திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் அனைவரும் “இந்தியா டுகெதர்” என்ற ஹேஸ்டேக்கின் கீழே தங்கள் கருத்துகளை பதிவிட்டுடுள்ளனர். அதில் “வெளி நாட்டினர் அனைவரும் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இந்திய இறையாண்மைக்குள் இருங்கள்” என தெரிவித்துள்ளனர். இது ரிஹானா போன்ற பலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.35 மணிக்கு ரிஹானாவின் சொந்த நாடான டொமினிக் குடியரசு மற்றும் பார்படாஸ் ஆசிய இருநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் மும்பையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக பார்படாஸ் நாட்டு பிரதமர் மியா மோட்லி தங்கள் நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்ப முடிவெடுத்ததற்காக நன்றி தெரிவித்து இந்தியாவின் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தங்கள் நாட்டுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே வங்கதேசம், மாலத்தீவு, பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சீஷெல்ஸ், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |