பாலியல் மற்றும் இனப்பெருக்க நல விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
பாலியல் மற்றும் இனப்பெருக்க நல விழிப்புணர்வு தினமானது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பால்வினை நோய் பரவலை குறைக்கும் பொருட்டு, பாலியல் மற்றும் இனப்பெருக்க பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்றனர். இந்த நாளில் சுகாதார பிரச்சனையாக கருதப்படும் பால்வினை நோய்களை தடுக்கும் பொருட்டு பிரச்சாரங்கள் மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகிறது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறும் போது, பால்வினை சுகாதாரம் என்பது ஒரு நபரின் மனம், உடல் மற்றும் சமூக நல நிலையை உள்ளடக்கியது என தெரிவித்துள்ளது. மேலும் பால்வினை சுகாதாரம் என்பது உடலுறவு இன்பம், பால்வினை தொற்று நோய்கள், மனித உரிமைகள், எச்.ஐ.வி எய்ட்ஸ் போன்ற நோய்கள், பாலியல் சுகாதார தோடு தொடர்புடைய மனநலம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இந்த விழிப்புணர்வு தினத்தில் இனப்பெருக்க நலத்தைப் பேணுவதற்காக பலனளிக்கும், பாதுகாப்பான, ஏற்றுக்கொள்ளக்கூடிய விரும்பும் வகையிலான கருத்தடை முறைகள் மற்றும் எச்.ஐ.வி போன்ற பால்வினை நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.