Categories
தேசிய செய்திகள்

Shocking! மானியம் ரத்து…. உயரும் சிலிண்டர் விலை – அதிர்ச்சி தகவல்…!!

கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் கூட சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

பட்ஜெட்டில் உஜ்வாலா திட்டத்தில் ஏற்கனவே உள்ள 8 கோடி பேருடன் மேலும் 1 கோடி பேர் சேர்க்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் உஜ்வாலா திட்டத்துக்கு பெருமளவு தொகையை மத்திய அரசு முடிவு பயன்படுத்த முடிவு செய்திருப்பதால் கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |