Categories
தேசிய செய்திகள்

மக்களே சூப்பர்! இந்த ஏடிஎம் கார்டு வைத்திருந்தால்…. ரூ.2 லட்சம் கிடைக்கும் – எஸ்பிஐ அறிவிப்பு…!!

ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு தொடங்கி ரூபே கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு சலுகையை எஸ்பிஐ அறிவித்துள்ளது.

நாட்டிலுள்ள ஏழை எளிய மக்ள் அனைவரும் வங்கி கணக்கு தொடங்குவதை நோக்கமாக 2014ம் வருடத்தில் நரேந்திர மோடியால் பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியும் வாங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நேரடியாக டெபாசிட் செய்யப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கும் கிஷான் அட்டைகளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தொடர்பான தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “இந்த திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூபே  கார்டுக்கு விண்ணப்பித்தால் 2 லட்சம் வரையிலான விபத்து காப்பீட்டு திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் ஜன்தன் திட்டத்தில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களும், இனி கணக்கு தொடங்குபவர்களும் இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த ரூபே கார்டு 90 நாட்களுக்கு ஒரு முறையாவது பயன்படுத்தி இருக்க வேண்டும். ஜன்தன் திட்டத்தில் தொடரப்பட்ட வங்கிக்கணக்குகளுக்கு ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி தேதி என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |