Categories
உலக செய்திகள்

பிப்-15 முதல்….. புதிய கொரோனா ரூல்ஸ்….. மீறினால் 10 ஆண்டு சிறை…ரூ10,00,000 அபராதம்….!!

பிரிட்டனில் கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல முடியாத வகையில் போக்குவரத்து சேவை அனைத்தும் முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் சில நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.

அதனால் சில நாடுகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரிட்டனில் கொரோனோ முன்னெச்சரிக்கை பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தனிமைப்படுத்தலை மீறுபவர்களுக்கு அபராதம், சிவப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள 33 ஆண்டுகளில் இருந்து வருவதை மறைத்தாள் 10 ஆண்டு சிறை மற்றும் 10 லட்சம் அபராதம் உள்ளிட்ட விதிமுறைகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Categories

Tech |