வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் சோளம்பேடு சாலையில் 14 வயது சிறுமி தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியும், சென்னை மாவட்டத்திலுள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சுபாஷ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவருடன் அந்த சிறுமி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி புறப்பட்ட சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாயார் அந்த கடைக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது கடையின் உரிமையாளர் அந்த சிறுமி இங்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து அவரது தாயார் அந்த சிறுமியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருமுல்லைவாயில் போலீசார் காணாமல் போன அந்த சிறுமியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் சுபாஷ் என்ற வாலிபர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சுபாஷை போலீசார் கைது செய்து விட்டனர். அதன் பின் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுபாஷ், சிறையில் அடைக்கப்பட்டார்.