Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு “வேற லெவல்”… புதிய அதிரடி அறிவிப்பு… போடு ரகிட ரகிட…!!!

கொரோனாவால் தமிழகம் திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்கள் தொழில் தொடங்க புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு யாரும் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் வெளிநாடுகளுக்குச் சென்ற மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். அதிலும் குறிப்பாக வெளிநாடு வாழ் தமிழர்கள் பல இன்னல்களுக்கு பிறகு தமிழகம் வந்தடைந்தனர்.

இந்நிலையில் கொரோனாவால் தமிழகம் திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்கள் தொழில் தொடங்க புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடனுதவி அளிக்க முடிவு செய்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய தொழில்முனைவோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். தங்களின் மாவட்டத்தில் உள்ள தொழில் மையம் அல்லது மாவட்ட ஆட்சியரை இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |