கொரோனா சீனாவிலிருந்து பரவியது என்று குற்றம் சாட்டிய அமெரிக்காவை நம்பவேண்டாம் என்ற அறிவியாளரின் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது .
சீனாவின் வுஹானிலிருந்து தான் கொரோனா பரவியது என்று அமெரிக்கா சீனா மீது குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா என்பதை கண்டறிவதற்காக சீனாவிற்கு சென்ற உலக சுகாதார அமைப்பின் அறிவியலார் பீட்டர் டஸ்சக் அமெரிக்கா மீதே குற்றம் சாட்டி உள்ளார் . மேலும் அமெரிக்கா சொல்வதை அப்படியே நம்பாதீர்கள் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு குழுவின் தலைவரான பீட்டர் எம்பரெக், சீனாவின் வுஹான் மாமிச சந்தை அல்லது ஆய்வகம் ஒன்றிலிருந்து தான் கொரோனா தொற்று பரவியதாக அமெரிக்க கூறிய கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் வெளிநாடு ஒன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறையவைத்த மாமிசத்திலிருந்து தான் கொரோனா பரவியிருக்கும் என்று சொன்ன சீனாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவிக்க ஆதாரங்கள் அதிகமாக சேகரிக்க வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார் . ஏற்கனவே உலக சுகாதார அமைப்பின் தலைவரான Dr டெட்ராஸ் சீனாவை புகழ்ந்ததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் .இந்நிலையில் இப்போது உண்மை அறியும் குழுவும் சீனாவுக்கு சாதகமாக கருத்து தெரிவித்துள்ளனர்.