காதலித்த வாலிபருடன் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணப்பெண் வேறொரு வாலிபருடன் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஷோ ரூமில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தப் பெண் பேஸ்புக் மூலம் அறிமுகமான திருநின்றவூர் பகுதியில் வசித்து வரும் வாலிபரை கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் வில்லிவாக்கம் பகுதியில் இவர்களது திருமண நிச்சயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் திடீரென அந்த இளம்பெண் காணாமல் போய்விட்டார். இதனை அடுத்து அந்த மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தபோது, அந்த பெண் மற்றொரு வாலிபருடன் ஆட்டோவில் ஏறி சென்ற காட்சிகளை அனைவரும் பார்த்துள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். அந்த சமயத்தில் அந்த இளம்பெண் கிண்டி காவல் நிலையத்தில் வேறு ஒரு வாலிபருடன் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்து விட்டார். அப்போது அந்த இளம்பெண் ஒரே நேரத்தில் தான் இரண்டு வாலிபர்களை காதலித்ததாகவும், தான் திருமணம் செய்யப் போகும் வாலிபரை விட, இவருடன் தான் வாழ ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே போலீசாரிடம் இந்த வாலிபருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு விரைந்து வந்த புது மாப்பிள்ளை அந்த இளம்பெண் மீது தன்னை காதலித்து மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.