29 வயது இளம்பெண் 80 வயது முதியவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கேப்டவுன் நகரில் டெர்ஸல் ராஸ்மஸ் என்ற சட்டம் படித்து வரும் 29 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் வில்சன் என்ற 80 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து டெர்ஸல் கூறும்போது, கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் வில்சனை பார்த்ததாகவும், அப்போது தனது பக்கத்தில் அமரலாமா என வில்சன் அனுமதி கேட்டது தன்னை ஈர்த்ததாகவும் கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் இருவரும் அதிக நேரம் பேசிய பின்பு அங்கிருந்து செல்வதற்கு இருவருக்கும் விருப்பமே இல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
அதன்பின் இருவரும் தங்களுடைய செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு ஒருநாள் டேட்டிங் சென்றுள்ளனர். அப்போது இருவரும் ஒருவர் மீது ஒருவருக்குள்ள காதலை வெளிப்படுத்தி, அதிலிருந்து ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டோம் என கூறியுள்ளார். மேலும் இவர்களின் திருமணத்திற்கு டெர்ஸலின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததால், வில்சனின் 51 மகளை சாட்சியாக வைத்து இவர்கள் திருமணம் செய்துள்ளனர். இவர்கள் திருமணத்திற்கு பிறகு வெளியில் சென்றபோது டெர்ஸலை வில்சனின் மகள் என்று பலர் கூறியிருக்கின்றனர். ஆனாலும் வாழ்நாள் முழுவதும் தன்னை நன்றாக கவனித்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் வில்சனை தன் வருங்கால கணவராக தேர்ந்தெடுத்ததாக டெர்ஸல் கூறியுள்ளார்.