ஹரி- அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .
தமிழ் திரையுலகில் சாமி ,வேல், ஆறு, பூஜை ,சிங்கம் என பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார் . இந்த படத்தில் யோகி பாபு, பிரகாஷ்ராஜ், ‘கேஜிஎஃப்’ நடிகர் ராமச்சந்திர ராஜு ,குக் வித் கோமாளி பிரபலம் புகழ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது .
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . ஏற்கனவே ஹரி- ஜிவி பிரகாஷ் இருவரும் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘சேவல்’ படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தற்போது 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இவர்கள் கூட்டணி இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது .