அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படம் குறித்த முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் தயாராகி வருகிறது . ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக இந்தப் படத்தைப் பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்கள் அடிக்கடி படக்குழுவினரிடம் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர் .
இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் ‘வலிமை’ படம் குறித்து பேசியுள்ளார் . அதில் ‘வலிமை படத்தின் ஒரு சண்டைக்காட்சியை வெளிநாட்டில் படமாக்க வேண்டியுள்ளது . அதை தவிர்த்து பிப்ரவரி 15 க்குள் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் . விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்படவுள்ளது . மேலும் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை’ என்று கூறியுள்ளார் .