இமயமலை அதிவேகமாக வெப்பமடைந்து வருவதால் 50 கோடி இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு ஓட்டை விழுந்துள்ளதால் பூமி அதிகமாக வெப்பமடைந்து வருகிறது. எனவே பூமி வெப்பமடைதலை தடுப்பதற்காக மரக்கன்றுகள் நடுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்திய நிலப்பரப்பை விட இமயமலை அதிக வேகமாக வெப்பமடைந்து வருகிறது என்று கூறப்படுகின்றது.
இந்த நிலை தொடர்ந்தால் இமயமலையில் உள்ள பனிமலைகள் உருகி விடும் என்று காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த மாற்றம் நிகழ்ந்தால் இந்த பனி மலைகளில் உற்பத்தியாகும் கங்கையை நம்பியுள்ள 50 கோடி இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.