சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு திரையிடப்படவுள்ள தமிழ் படங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
வருடந்தோறும் சர்வதேச திரைப்படவிழா நடத்தப்பட்டு சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து கௌரவித்து வருவது வழக்கம். இந்நிலையில் 11-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா பிப்ரவரி 18 முதல் 25 வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 91 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த விழாவில் லேபர், கல்தா, சூரரைப்போற்று, பொன்மகள்வந்தாள், மழையில் நனைகிறேன், மை நேம் ஐஸ் ஆனந்தன், காட்பாதர், தி மஸ்கிடோ பிலாசபி, சியான்கள், சம் டே, காளிதாஸ், க/பெ ரணசிங்கம், கன்னிமாடம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.