தமிழகத்தில் சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படாத நிலையில் 3வது அணி அமைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழகத்தின் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன் பிறகு நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினார். அவரின் வருகையை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். அது மட்டுமன்றி சில பரபரப்பு சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படாத பட்சத்தில் தமிழகத்தில் வலுவான மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சசிகலா ஆதரவுடன் அமமுக, முக்குலத்தோர் புலிப்படை, தேமுதிக, சமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டணி கட்சிகள் பிளவு படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.