மஹாராஷ்டிரா_வில் பெய்த கன மழையில் அணை உடைந்து 6 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டும் கன மழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையின் அளவு பதிவாகியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்நிலையில் அங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தின் திவாரே அணை அதிக நீர் வரத்தால் உடைந்தது. இதிலிருந்து வெளியாகிய நீர் வெள்ளமாக மாறி அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளத்தில் மிதந்தன. தற்போது வெளியாகிய தகவலில் வெள்ள நீர் புகுந்ததில 12 வீடுகள் அடித்து செல்லப்பட்டு விட்டது. மேலும் 6 பேர் உயிரிழந்து , இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட 18 பேரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.