Categories
உலக செய்திகள்

ஆட்சியை அவர்களிடம் ஒப்படையுங்கள்… இல்லையெனில் இது தான் நடக்கும் … இராணுவத்திற்கு ஜோபைடன் கடும் எச்சரிக்கை…!!

மியான்மரில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியதற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மியான்மரில் கடந்த வாரத்தில் ஜனநாயக ஆட்சியை எதிர்த்து ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட பல முக்கிய அரசு தலைவர்கள் இராணுவத்தால் சிறைவைக்கப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இராணுவத்தின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் ராணுவத்தின் தலைமைக்கு அளிக்கப்படவேண்டிய உதவி தொகைக்கும் தடைவிதித்துள்ளார். அதாவது மியான்மருக்காக அளிக்கவேண்டிய சுமார் ஒரு பில்லியன் டாலர் தொகையை அமெரிக்கா தடை செய்திருக்கிறது.

எனினும் பொது மக்களுக்கும் சுகாதாரத்திற்கும் உதவக்கூடிய நலத் திட்டங்களுக்கான உதவித் தொகையை தொடர்ந்து அளிப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும் ஜோபைடன், ராணுவம் மீண்டும் அதிகாரத்தை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அமெரிக்காவால் புதிய தடைகளை விதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Categories

Tech |