Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல்ஹாசன் தான் முதல்வர்… கட்சி எடுத்த அதிரடி முடிவு…!!!

தமிழகத்தில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி சசிகலா தமிழகம் திரும்பினார். அப்போது அவருக்கு ஆரவார வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் தங்கள் முதல்வர் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள். அதன்படி மக்கள் நீதி மையம் கட்சி யின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில் வருகின்ற தேர்தலில் மக்கள் நீதி மைய கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான முடிவுகள் எடுக்க கமலுக்கே முழு அதிகாரம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |