சென்னையில் இருக்கும் சசிகலா ஒரு வாரத்திற்கு யாரையும் பார்க்க மாட்டார் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி சசிகலா தமிழகம் திரும்பினார். அப்போது அவருக்கு ஆரவார வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியுள்ள சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வாரம் சசிகலா தனிமையில் இருப்பார் என்றும் வருகின்ற 17 ஆம் தேதி முதல் ஆதரவாளர்கள், நலம் விரும்பிகளை சந்திக்க உள்ளார் எனவும் அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஒரு வார காலத்தில் அதிமுக முக்கிய தலைவர்களுடன் சசிகலா ரகசிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.