Categories
தேசிய செய்திகள்

ஹோட்டலுக்குள் புகுந்த சிங்கம்… வைரலாகும் CCTV காட்சிகள்… குஜராத்தில் பரபரப்பு…!!

ஹோட்டலுக்குள் சிங்கம் வந்து சென்ற சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்னார் மலை அடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் அரியவகை ஆசிய சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த சரணாலயம் அமைந்துள்ள ஜூனாகத் மாவட்டத்தின் மையப்பகுதியில் சரோடிவர் போர்டிகோ என்ற ஹோட்டல் அமைந்துள்ளது. இந்நிலையில் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் அதிகாலை வேளையில் சிங்கம் ஒன்று ஹோட்டலுக்குள் கதவுகளை தாண்டி உள்ளே வந்து விட்டு, மீண்டும் வெளியே செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து ட்விட்டரில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதில் வனவிலங்குகள் பாதை மாறியோ அல்லது பசிக்காகவோ இவ்வாறு ஊருக்குள் வருவது ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் விலங்குகளால் மனிதர்களுக்கோ அல்லது மனிதர்களால் விலங்குகளுக்கோ ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாகவே வனத்துறையினர் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |