Categories
உலக செய்திகள்

எச்சரிக்கையாக இருங்கள்… கவனக் குறைவாக இருக்க வேண்டாம்… மாநிலத் தலைவர் அறிவிப்பு…!

பிரிட்டனில் மார்ச் மாதம் வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இருப்பினும் உருமாறிய புதிய கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,ஜெர்மனியில் போடப்பட்டு இருக்கும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொது முடக்கத்தை மார்ச் 7ம் தேதி வரை நீட்டிக்க ஜெர்மன் மத்திய அரசாங்கம் மற்றும் 16 மாநில தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் பள்ளிகள் மற்றும் அலங்கார கடைகள் மார்ச் 7ஆம் தேதிக்கு முன்னதாகவே திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சாக்சனி மாநில தலைவர் மைக்கேல் கிரெட்ச்மர் தெரிவித்ததாவது, நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையும்போது கட்டுப்பாடுகளில் தளர்வுகள் விதிக்கப்படும். மார்ச் மாதங்களில் கட்டுப்பாடு தளர்வுகளைப் பற்றி பேசுவோம். எல்லா நேரமும் கவனக்குறைவாக இருக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |