சொகுசு விமானங்களை தினமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு லாட்டரியில் $1 மில்லியன் ரூபாய் பரிசுத் தொகை கிடைத்துள்ளது.
பிரிட்டனிலுள்ள Doncaster என்ற பகுதியை சேர்ந்த 47 வயதான நபர் Mark Plowright. இவருக்கு Sara என்ற மனைவி இருக்கிறார். Seffield என்ற விமான நிலையத்தில் Mark பணக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய ஆடம்பர விமானங்கள் குறித்த ஒரு பணியில் வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது பல வகையான சொகுசு விமானங்களை ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பாராம் Mark. இந்நிலையில் அவருக்கு $1 மில்லியன் ரூபாய் பரிசுத் தொகை லாட்டரியில் கிடைத்துள்ளது. இதன் மூலம் விமானங்களை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த Mark அதில் பயணிக்கவுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, தினந்தோறும் சொகுசு விமானங்களுடன் பணி புரிகையில் இந்த விமானத்தில் முதல் வகுப்பில் பயணிக்க வேண்டும் என்ற கனவு எப்போதுமே எனக்குள் இருந்தது. தற்போது இந்த லாட்டரியில் கிடைத்த பரிசினால் என் கனவு நனவாகியுள்ளது. இதன் மூலம் Fiji, Barbadosற்க்கு என் மனைவியிடம் நான் தனி விமானத்தில் பயணிக்கவுள்ளேன். மேலும் இந்த பணத்தில் ஆடம்பரமான குளியல் தொட்டி ஒன்றை வாங்க முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.