Categories
சினிமா தமிழ் சினிமா

‘திருமணத்திற்குப் பின்னும் பட வாய்ப்புகள் குவிகிறது’… நடிகை ஆனந்தி பேட்டி…!!!

திருமணத்திற்குப் பின்னும் தனக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக நடிகை  ஆனந்தி தெரிவித்துள்ளனர் .

தமிழ் திரையுலகில் நடிகை ஆனந்தி கயல் ,பரியேறும் பெருமாள், சண்டிவீரன் , இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் இயக்குனர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் ‘கமலி பிரம் நடுக்காவேரி’ என்ற படத்தில் நடித்துள்ளார் . சமீபத்தில் நடிகை ஆனந்தி அளித்துள்ள பேட்டியில் ‘குடும்ப வாழ்க்கையில் எனது கணவர் எனக்கு ஆதரவாக இருக்கிறார் . தொடர்ந்து நான் நடிக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசை . திருமணத்திற்கு பின் படவாய்ப்புகள் வராது என்று நினைத்தேன் .

ஆனந்தி

ஆனால் எனக்கு இப்போதுதான் அதிக பட வாய்ப்புகள் வருகிறது . ஒரு பெண்மேல் அவரது பெற்றோரை விட அதிகமாக யாராலும் அன்பு செலுத்த முடியாது . ஆனால் அதை புரிந்து கொள்ளாத பெண்கள் வழி தவறி விடுகின்றார்கள் . இதனால் தான் பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள் . இதுபோன்ற பிரச்சனைகளை கடப்பது எப்படி என்பதுதான் கமலி பிரம் நடுக்காவேரி படத்தில் சொல்லப்பட்டுள்ளது . மேலும் ஆண்களுக்கு இருக்கும் ஆதரவு பெண்களுக்குக் கிடைப்பதில்லை ‌. அவர்களுக்கு திறமை இருந்தாலும் கனவு நிறைவேறுவதில்லை’ என்று கூறியுள்ளார் .

Categories

Tech |