கொரோனா நோயிலிருந்து மீண்ட உலகிலேயே இரண்டாவது வயதான பெண்மணி தற்போது நலமாக உள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஆண்ட்ரே என்ற பெண்மணி உலகில் இரண்டாவது வயதான நபராக ஜெரண்டாலஜி ஆராய்ச்சிக் குழு அறிவித்திருந்தது. இவருக்கு 116 வயது ஆகின்றது. இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதியானதையடுத்து அவர் சிகிச்சைக்குப் பின் தற்போது மீண்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக பிரான்ஸ் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
இவர் கண்பார்வையற்று இருந்த போதிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு அனைத்தையும் கேட்டறிவார். மேலும் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியான பின்பு அதைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. ஆண்ட்ரே தங்கியிருக்கும் பராமரிப்பு இல்லத்தின் தகவல் தொடர்பு மேலாளர் டேவிட் தவெல்லா கூறும் போது “அவர் உடல்நிலை பற்றி என்னிடம் கேட்டறிவார். தான் முழுமையாக குணமடைந்து விடுவேன் என்று அவர் நம்பினார். அது மட்டுமின்றி மற்றவர்களின் உடல்நிலை குறித்தும் அவர் கேட்டுள்ளார்” என்று அவர் கூறினார்.