வீட்டிலிருந்தபடியே அஞ்சல் கணக்கு தொடங்குவது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
இல்லதரசிகளுடைய சேமிப்புகளில் முக்கிய பங்கு வகிப்பது அஞ்சலகங்கள் தான். அதிலும் தற்போதைய காலகட்டத்தில் நகர்ப்புறங்களில் அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. தற்போதைய நவீன காலகட்டத்தில் ஆன்லைனில் வீட்டிலிருந்து கொண்டே வங்கிக் கணக்கைத் துவங்கி கணக்கிடலாம். இந்த அஞ்சல் சேமிப்பு கணக்கினை மொபைல் அப்ளிகேஷன் மூலமாக ஆரம்பிக்க முடியும். இதில் சில அடிப்படை வங்கி சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். உதாரணத்திற்கு சேமிப்பு கணக்கில் பணம் செலுத்துதல், இருப்பு கணக்கை பார்க்க, பணபரிமாற்றம் செய்ய, தொடர் வைப்பு நிதி, வருங்கால வைப்பு நிதி, பிஎப் போன்றவற்றை அறிய முடியும். இதில் கணக்கு தொடங்குபவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
கணக்கு தொடங்குவது எப்படி?
முதலில் இந்த சேமிப்பு கணக்கினை தொடங்க, IPPB ஆப்பினை உங்களது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு ஒபன் அக்கவுண்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இதன் பிறகு உங்களது ஆதார் எண் மற்றும் பான் எண் தேவைப்படும். இதனை பதிவு செய்த பிறகு, நீங்கள் பதிவு செய்ய மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். இதன் பிறகு உடனடியாக நீங்கள் ஒரு கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம்.
அதன் பிறகு உங்களது முக்கிய விவரங்கள், அதாவது அம்மா பெயர், கல்வித் தகுதி, முகவரி, நாமினி விவரம் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும்.
தேவையான விவரங்களை கொடுத்த பிறகு சப்மிட் கொடுக்கவும். அதன் பிறகு உங்களது சேமிப்பு கணக்கினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
எனினும் இந்த டிஜிட்டல் சேமிப்பு கணக்கு ஒரு வருடத்திற்கு மட்டுமே வேலிட் ஆக இருக்கும். இதனை துவங்கிய ஒரு வருடத்திற்குள், நீங்கள் நேரடியாக சென்று பையோமெட்ரிக் முறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.