ரோகித் சர்மா தான் சிக்ஸர் அடித்த பந்து பட்ட ரசிகை மீனாவுக்கு தனது தொப்பியை பரிசாக வழங்கியுள்ளார்
உலக கோப்பை போட்டியில் நேற்று 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி தனது 26-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேலும் கேஎல் ராகுல் 77 ரன்களும், ரிஷப் பண்ட் 48 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 314 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரை இறுதிக்குள் நுழைந்தது.
இந்த போட்டியின் போது ரோகித் சர்மா 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசினார். இதில் ஹிட் மேன் அடித்த சிக்ஸர் அடித்த ஓன்று மீனா என்ற ரசிகை மீது பட்டது. எனினும் அவருக்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதனை ரோகித் கவனித்திருந்தார். போட்டி முடிந்ததும் ரசிகை மீனாவை சந்தித்த ரோகித் அவரிடம் நலம் விசாரித்தார்.
பின்னர் தனது கையெழுத்து போடப்பட்ட தொப்பியை பரிசாக வழங்கினார். மேலும் ரோகித் சர்மா அவரிடம் சிரித்து பேசி கலகலப்பாக சிறுது நேரம் உரையாடினார். இந்த சம்பவம் மீனாவையும் மைதானத்தில் இருந்தவர்களையும் மனம் நெகிழ வைத்தது.