தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதவி காலம் மே 24 உடன் முடிவடைவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதவிக் காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவும், வாக்குப்பதிவு முடிந்த இரண்டு நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தவும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும். வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களே தேர்தல் பார்வையாளர்களாக சேமிக்கப்படும் வார்கள் என்று அவர் அறிவித்துள்ளார்.