இரவில் பிரைடு ரைஸ் சாப்பிட்டுவிட்டு உறங்கிய குழந்தைகள் காலையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட சந்தோஷ்- ஆர்த்தி தம்பதியினர் திருப்பூரில் தன்னுடைய ஏழு வயது மகன் மற்றும் 5 வயது மகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் துரித உணவு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து இரவு பணி முடிந்து வரும் அவர் தந்து குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இதேபோன்று சம்பவத்தன்றும் குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் சாப்பாடு ஊட்டிவிட்டு உறங்க வைத்துள்ளார்.
இந்நிலையில் மறுநாள் காலையில் குழந்தைகள் படுக்கையில் அசைவற்று கிடந்துள்ளதால் சந்தோஷ் குழந்தைகளை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடியுள்ளார். ஆனால் குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் சாப்பிட்ட உணவு செரிக்காமல் இருந்ததால் உயிரிழந்துள்ளனர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இறந்ததற்கான காரணத்தை உறுதி செய்வதற்காக தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு துரித உணவுகளையும், பாக்கெட்டுகளில் அடைத்த உணவுகளையும் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றது.