Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஏலே’ படம் தியேட்டர் ரிலீசில் சிக்கல்… படக்குழு எடுத்த அதிரடி முடிவு…!!!

‘ஏலே’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதில்  சிக்கல் ஏற்பட்டதால் படக்குழுவினர் அதிரடி முடிவு எடுத்துள்ளனர் .

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஏலே’ . சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா சமீம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் . இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளனர் . இந்தப் படம் வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி ரிலீஸாக இருந்தது . மேலும்  படத்தை ஓடிடியில் பிப்ரவரி 27ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர் . மாஸ்டர் பட சர்ச்சையால் திரையரங்கில் வெளியாகி குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு பின்பு தான் ஓடிடியில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால் தான்  திரையரங்கில் வெளியிடவே  அனுமதி அளித்துள்ளார்கள்.

ஏலே படக்குழுவினர்

இதனால் இந்தப் படம் திரையரங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது .  இந்நிலையில் ‘ஏலே’ திரைப்படத்தை வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர் . சமீபத்தில் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு லட்சுமி மேனன் நடிப்பில் உருவான புலிகுத்தி பாண்டி திரைப்படமும் நேரடியாக டிவியில் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |