கியூபாவை சேர்ந்த மூவர் கடந்த ஒரு மாதமாக ஆளில்லா தீவில் சிக்கிகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கியூபா நாட்டை சேர்ந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் தனியாக ஒரு படகில் பகாமாஸ் என்ற பகுதியில் பயணித்தபோது திடீரென்று கடலில் அந்தப் படகு கவிழ்ந்ததில் Anguila Cay என்ற மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பாலைவன தீவில் சிக்கிக்கொண்டனர். இதனால் அங்கு கிடைத்த தேங்காய்கள், எலிக்கறி மற்றும் சங்கு கறி போன்றவற்றை உயிர் பிழைக்க வேண்டும் என்று சாப்பிட்டு வந்துள்ளனர்.
#BreakingNews @USCG is assisting 3 people who have reportedly been stranded on Anguilla Cay, Bahamas for 33 days. An Air Station Miami HC-144 Ocean Sentry aircrew has dropped a radio, food and water. More to follow.#D7 #Ready #Relevant #Responsive #searchandrescue #USCG pic.twitter.com/D263ptTarz
— USCGSoutheast (@USCGSoutheast) February 9, 2021
இந்நிலையில் அமெரிக்க கடலோர காவல்படை கடந்த திங்கட்கிழமை அன்று பகாமாஸ் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது Anguila Cay என்ற தீவிலிருந்து ஒருவர் கொடியசைத்து சமிக்கை காட்டுவதை பார்த்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்படையினர் அப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது அந்த தீவில் ஒரு மாதகாலமாக மூன்று நபர்கள் சிக்கிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக ஒரு குழு அங்கு அனுப்பப்பட்டு, அவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு தொடர்பு கொள்ள ரேடியோ அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த குழு மறுநாள் அவர்களை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.