கோவை அருகே பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் எடுத்த முத்து கவுண்டர் புதூர் என்ற பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ராஜ், அப்பகுதியில் உள்ள கருப்பசாமி என்பவரின் உணவகத்தில் பரோட்டா வாங்கியுள்ளார். அப்போது கூடுதலாக ஆரோக்கியராஜ் குருமா கேட்டுள்ளார். ஆனால் கூடுதல் குருமா தர மறுத்த கருப்பசாமி, அவரே ஆபாசமான வார்த்தையில் திட்டியுள்ளார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி அளவுக்குப் போனது. அப்போது கருப்பசாமியும் கடையில் வேலை பார்த்து வந்த முத்து மற்றும் கரிகாலன் ஆகிய மூவரும் சேர்ந்து ஆரோக்கியராஜை தாக்கியுள்ளனர்.
அதனால் நிலைகுழைந்து போன ஆரோக்கிய ராஜ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அதன் பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து இந்த கொலையில் தொடர்புடைய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.