Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 3/4 டன்… சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்தல்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

2 3/4 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்கள் கடத்திய ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்து விட்டனர்.

தூத்துக்குடி அழகேசபுரம் மெயின் ரோட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ரைஸ்மில்லின் முன்பு நின்று கொண்டிருந்த ஒரு லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த லோடு ஆட்டோவில் இருந்த 2,775 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விட்டனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொளத்தூர் நடுத்தெருவில் வசித்துவரும் முத்துராஜ் என்பவரும், குரும்பூர் பகுதியில் வசித்து வரும் அந்தோணிராஜ் என்பவரும் ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின்  அவர்களை கைது செய்த போலீசார் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்து விட்டனர். அதோடு அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |