கர்நாடகாவில் குடும்பம் நடத்த பணம் இல்லாததால் அரசு ஊழியர் சிறுநீரகத்தை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுமந்தா காகெரே இவர் மனைவி மூன்று குழந்தைகள் மற்றும் தன் தாயுடன் வாழ்ந்து வந்தார். அனுமந்தா கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார்.கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் போக்குவரத்து ஊழியர்களுக்கு வேலை இல்லாமல் இருந்தது. பயணிகள் வராத காரணத்தினால் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
ஆகையால் போக்குவரத்து கழகம் நஷ்டத்திற்கு உள்ளானது. அதனால் போக்குவரத்து ஊழியர்களான கண்டக்டர்கள் டிரைவர்கள் என எவருக்கும் சம்பளம் வழங்க முடியவில்லை. பிறகு காலப்போக்கில் கொரோனா பாதிப்பு குறைந்த உடன் போக்குவரத்து கழகம் இயங்க ஆரம்பித்தது .ஆனால் குறைந்த அளவில் மட்டுமே பயணிகள் பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் ஊழியர்களுக்கு சரியான முறையில் சம்பளம் அளிக்க முடிய வில்லை. எனவே போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போராட்டத்தில் போக்குவரத்து கழக துணை முதல்-மந்திரி” லக்ஷ்மன் சவதி “போக்குவரத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்பொழுது போக்குவரத்து ஊழியர் தன் குடும்ப செலவிற்காக சிறுநீரகத்தை விற்றது தெரியவந்தது. இதனை கேட்ட துணை முதல்-மந்திரி லக்ஷ்மன் அதிர்ச்சிக்கு உள்ளானார். இதனை பற்றி விசாரித்தபோது அவர் தன் தாயின் உடல் நலச்செலவிற்கு குடும்பத்திற்காகவும் செய்தார் என்பது தெரியவந்தது. கடந்த இரண்டு மாதங்களாக நிலையில் அவருக்கு மாதம் 3 000அல்லது 3500 மட்டுமே சம்பளம் வழங்குவதாகவும் அதனால் வேறு வழியில்லாமல் சிறுநீரகத்தை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறினார். இதற்காக ஏராளமானோர் அனுமந்தனக்கு உதவி செய்தனர்.`