அமெரிக்காவில் 12 வயதுடைய சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் 8 வயதுடைய சிறுமி ஒருவர் தன் அண்ணனின் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது அலறியடித்தபடி அச்சிறுமி வெளியே ஓடி வந்துள்ளார். அதன்பின்பு அச்சிறுமியின் தந்தை ஓடிச்சென்று அறையினுள் பார்க்க அவரின் 12 வயதுடைய மகன் Hyden hunstable தூக்கில் தொங்கிகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக அவர் தன் மகனுக்கு அவசர சிகிச்சை அளித்துள்ளார். எனினும் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த சிறிய வயதில் அவன் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. கொரோனா தொற்றின் காரணமாக தன் நண்பர்களை தினசரி பார்க்க முடியாமல் அச்சிறுவன் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மகிழ்ச்சியாகவே காணப்பட்டதாகவும் இப்படி முடிவெடுத்ததற்கு காரணம் என்ன? என்று தெரியாமலும் சிறுவனின் பெற்றோர் தவிக்கிறார்கள். மேலும் இந்த கொரோனாவால் தான் எங்கள் மகனின் உயிர் பிரிந்தது என்று கதறி அழுகிறார்கள். மேலும் Hydenற்க்கு கால்பந்து விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்குமாம்.குடும்பத்துடன் சேர்ந்து கால்பந்தாட்ட மைதானங்களில் சிறுவன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
தான் ஆசையாய் வளர்த்த மகன் உயிரிழந்த சோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்து வரும் தந்தை தங்கள் சோகத்தை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக மாற்ற சிறுவனின் நினைவாக மனநல ஆலோசனைகள் வழங்கும் மையம் ஒன்றை தொடங்கியுள்ளார். இனிமேல் இது போன்ற முடிவுகளை எவரும் எடுக்கக்கூடாது என்பதற்காக இந்த மையத்தை துவக்கியுள்ளனர்.