வேலை இல்லாமல் தவிக்கும் நபர்களுக்கு தகவல் தொடர்பு நிறுவனம் புதிய ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி வெளி மாநிலங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் வேலை இல்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர். தற்போது ஊரடங்கும் தளத்தபட்டதால் சிலர் மீண்டும் வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை செய்து வருகின்றனர்.
ஆனால் சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வேலை கிடைக்காமலும் வீட்டிலேயே இருக்கும் நிலைமையில் உள்ளனர். இவர்களின் வேதனையை போக்குவதற்காக தகவல் தொழில்நுட்பத் துறை TIFAC இன் செயல் இயக்குனர் பிரதீப் ஸ்ரீவஸ்தாவா,TIFAC என்ற போர்டல் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
அதன்படி நீங்கள் உங்கள் மொபைலில் உள்ள வாட்ஸ் அப்பில் இருந்து 7208635370 என்ற எண்ணிற்கு ஹாய் மெசேஜ் மட்டும் அனுப்பினால் போதும். உள்ளூரில் இருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் உங்கள் தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும்.வேலை இல்லாத இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுக்கான வேலையை தேர்வு செய்துகொள்ளலாம்.
மேலும் வாட்ஸ்அப் இல்லாத நபர்கள் 022-67380800 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களுக்கான வேலை குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தகவல் தொழில்நுட்ப இயக்குனர் பிரதீப் ஸ்ரீவஸ்தாவா தெரிவித்துள்ளார்.