Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எப்போவும் இதே வேலையா போச்சு… எந்த சமயத்திலும் சண்டைதான்… கூலி தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…!!

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காவகட்டிகொட்டாய் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மதுவிற்கு  அடிமையானதால் எப்போதும் மது குடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் மது குடித்து விட்டு வரும்போது கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த அருள் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகரசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நாகரசம்பட்டி போலீசார் கூலித் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |