முருங்கை கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பூண்டு பல் – 5
இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் – 4
தக்காளி – 1
முருங்கை இலைகள் – 4 கப்
தண்ணீர் – 6 கப்
உப்பு, மிளகு – ருசிக்கேற்ப
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் முருங்கை கீரையின் இலைகளை மட்டும் ஆய்ந்து, தண்ணீரால் சுத்தம் செய்து உலர்த்திக் கொள்ளவும்
சாம்பார் வெங்காயம், இஞ்சி, பூண்டை எடுத்து அதன் தோல்களை நிக்கியபின், கொள்ளவும். பின்பு தோல் நீக்கிய பூண்டு, தக்காளி, சாம்பார் வெங்காயங்களை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், நறுக்கிய பூண்டு, இஞ்சி பேஸ்ட் சேர்த்து, நன்கு கிளறி பச்சை வாசனை போனபின், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சில நிமிடம் வதக்கியதும், நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
மேலும் தக்காளி நன்கு வதங்கியபின், ஆய்ந்த முருங்கை கீரைகளை போட்டு, சில மணி நிமிடம் நன்கு கிளறி விட்டு, கீரையின் நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.
இறுதியில் கீரை நன்கு வதங்கியபின், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ருசிக்கேற்ப உப்பு தூவி, மிளகு சேர்த்து கரண்டியால் நன்கு கலந்து, சில நிமிடம் நன்கு கீரை வேகும் வரை கொதிக்க வைத்து, இறக்கி பரிமாறினால் ருசியான முருங்கை கீரை சூப் தயார்.