எங்கள் ஆட்சி அமைந்தால் இந்த சட்டங்களை கிழித்து குப்பையில் வீசுவோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
மேற்கு உத்தரபிரதேசத்தில் “கிஷான் பஞ்சாயத்து “வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் எப்பொழுது வேண்டுமானாலும் தன் கூட்டங்களை அமைத்துக்கொள்ளலாம் என்று காங்கிரஸ் கட்சி கூறியது.இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் “பிரியங்கா” முதல் நாள் உரையாற்றினார்.அதில் பாரத ஜனநாயக கட்சியும் மோடியும் விவசாயிகளை மதிக்கவில்லை என்று கூறினார்.
அதுமட்டுமில்லாமல் அவர்கள் அமைத்த வேளாண் சட்டங்கள் மூன்றும் விவசாயிகளுக்கு சாத்தான்களாகவே அமையும் என்று உறுதியாகக் கூறினார். எனவே விவசாயிகளுக்கு உதவ காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்றும் இப்பொழுது அமைக்கப்பட்ட வேளாண் சட்டங்களை மாற்றி விவசாயிகளுக்கு ஏற்றவாறு அமைத்து தருவதாகவும் கூறினார். அதுவரை காங்கிரஸ் கட்சியும் அதனின் போராட்டமும் முடிவுக்கு வராது என உறுதியாக கூறினார்.