இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் அமெரிக்காவின் இணையதள நிறுவனங்களை எச்சரித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் மற்றும் ட்விட்டருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ரவிசங்கர் பிரசாத் உரையாற்றுகையில், முகநூல்,ட்விட்டர், LinkedIn மற்றும் வாட்ஸ் அப் போன்ற பெயர்களை குறிப்பிட்டு இது போன்ற நிறுவனங்கள் இந்தியாவில செயல்படுவது வரவேற்கத்தக்கது தான்.
எனினும் அது இந்தியாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டால் மட்டும்தான் என்று கூறியுள்ளார். இது போன்ற நிறுவனங்கள் இந்தியாவினுடைய அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்கள் தொடர்பில் தவறான கருத்துக்களை பரப்பியதாக சுமார் 1100 நபர்களின் கணக்குகள் நீக்க இந்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் முழுமையாக இதனை பின்பற்றவில்லை என்று கடந்த புதன்கிழமை அன்று ட்விட்டரை இந்திய அரசு கண்டித்திருந்தது. இதற்கு பதிலளித்த ட்விட்டர் நிர்வாகம் இது போன்ற உத்தரவுகள் இந்திய அரசியல் சட்டத்தில் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். எனவேதான் அனைத்து கருத்துக்களையும் நீக்கம் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.