Categories
தேசிய செய்திகள்

இது போராட்டம் அல்ல…. நாட்டில் பேரெழுச்சி…. ராகுல் காந்தி அதிரடி கருத்து …!!

வேளாண் சட்டங்கள் நாட்டின் விவசாய சந்தைகளை ஒழித்துகட்டிவிடும் என்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதியிலிருந்து மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நாடாளுமன்றத்தின் மக்களவையில், விவசாய சட்டங்களுக்கு எதிராக பேசினார்.

நரேந்திர மோடி பேசியதில் எதிர்க்கட்சிகள் விவசாய சட்டங்களில் உள்ள கூறுகள் பற்றி பேச மாட்டார்கள் என்று  கூறியுள்ளார்.ஆனால் நான் விவசாய சட்டங்கள் உள்ள கூறுகளுள் கருத்துகள் பற்றி பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கூறியுள்ளார். முதலில் இந்த விவசாய சட்டத்தின் நோக்கம் தான் என்ன ?”விவசாய சந்தைகளை ஒழித்துக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது “மத்திய அரசின் முதல் விவசாய சட்டம், இரண்டாவது சட்டம் “பெருநிறுவன முதலாளிகள் தங்களின் தேவைக்காக காய்கறிகள், பழங்கள் போன்ற விவசாய பொருட்களை அதிகளவில் சேமித்து வைப்பதற்கு இடமளிக்கிறது”.

மூன்றாவது சட்டம் இதுக்கும் மேல் கொடுமையாக  உள்ளது ,” விவசாயிகள் நீதிமன்றம் செல்ல அனுமதி இல்லையாம், நமது விவசாயிகள் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களிடம் அடிப்படை ஆதார விலைக்காக கையேந்த வேண்டுமாம்” .இந்த மாதிரியான புதிய சட்டங்களால் நாட்டில் பசி, பட்டினி, வேலையின்மை, தற்கொலை போன்ற கெட்ட சம்பவங்கள் தான் அதிகரிக்கும் என்றும், விவசாயிகள் போராட்டம் குறித்து ‘இது விவசாயிகளின் போராட்டம் அல்ல, நாட்டு மக்களின் எழுச்சி இயக்கம்’ என்றும்  ராகுல் காந்தி கூறினார்.

Categories

Tech |