டிடிவி தினகரன் தான் எனக்கு ஊத்திக்கொடுத்தாரு என்று அமைச்சர் சி.வி சண்முகம் பேட்டியளித்துள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஊடகங்களில் டிடிவி தினகரன் முன்பு அமைச்சர் சி.வி சண்முகம் பற்றிய கேள்வியினை செய்தியாளர்கள் வைத்துள்ளனர். அதற்கு பதில் கூறிய தினகரன், சண்முகம் நிதானமாகத்தான் பேசினாரா? என்று அறிய வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது சண்முகம் மது போதையில் உளறி இருப்பதாக சுட்டிக் காட்டியிருந்தார்.
இதையடுத்து தற்போது சி.வி சண்முகம் டிடிவி தினகரன் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் என்னை நிதானமாக பேசினாரா? என்று அவர் கேட்கிறார். ஆமா நான் நிதானமா இல்லை, எனக்கு ஊத்திக்கொடுத்தது அவரு தான். ஏனென்றால் அவருக்கு ஊத்திக்கொடுப்பது தான் தொழில். ஊத்தி ஊத்தி கொடுத்தே குடியை கெடுத்தவங்க. கூவத்தூர்லையும் இது போலத்தான் ஊத்தி கொடுத்தார் இல்லைனு சொல்ல சொல்லுங்க பார்ப்போம் என்று பயங்கரமாக தாக்கி பேசியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆமா… இவருதான் எங்களுக்கு ஊத்தி கொடுத்தாரு…😂
TTV.தினகரன் கும்பலை வறுத்தெடுத்த அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள்…🔥#CVShanmugam pic.twitter.com/GMCvbRhmEt
— BL.VelMurugan -Say No To Drugs & DMK (@MuruganLoganat1) February 11, 2021