Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ப்ரோட்டின் சத்து நிறைந்த உருளைக்கிழங்கில்… புதுவகையான ரெசிபி செய்து அசத்துங்க..!!

உருளைக்கிழங்கு தேங்காய் பால் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்: 

உருளைக்கிழங்கு         – 2
தேங்காய் பால்              – 1 கப் (கெட்டியானது)
கடுகு                                    – 1 டீஸ்பூன்
சீரகம்                                   – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை               – சிறிது
வெங்காயம்                     – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட்– 1 டீஸ்பூன்
உப்பு                                    – தேவையான அளவு
தக்காளி                             – 1
மிளகாய் தூள்                 – 1 அரை டீஸ்பூன்
மல்லித் தூள்                   – 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி                     – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்                   – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா                   – 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை   – சிறிதளவு

செய்முறை: 

முதலில் உருளை கிழங்கை எடுத்து நன்கு சுத்தம் செய்தபின், ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சுத்தம் செய்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு வேக வைத்து, இறக்கியபின் ஆற வைத்தபின், அதன் தோலுரித்தபின், துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.

பின்பு வெங்காயத்தையும், தக்காளியையும் சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பிறகு தேங்காயை துண்டுகளாக நறுக்கியபின் மிக்சிஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்து,அதன் பாலை மட்டும் தனியாக வடித்து எடுத்து கொள்ளவும்.

மேலும் அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அதனுடன் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு சிவக்க வதக்கியபின், அதில் அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதன் பின்பு இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனபின், நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கியபின், மிளகாய் தூள்,மல்லித் தூள்,சீரகப் பொடி, மஞ்சள் தூள்,கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விடவும்.

பின்னர் வதக்கிய மசாலா கலவையானது அதன் மசாலா வாடை போனபின் ,அதில் வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு லேசாக தண்ணீர் ஊற்றி, ருசிக்கேற்ப உப்பு தூவி நன்கு கொதிக்க வைத்து, உருளைக்கிழங்கு நன்கு வெந்தபின், அதில் வடிகட்டிய தேங்காய் பால் ஊற்றி, நன்கு கிளறி விடவும்.

மேலும் கிளறி விட்ட கலவையில், தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்கி கெட்டியானபின், இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைத்து, பரிமாறினால் சுவையான உருளைக்கிழங்கு தேங்காய் பால் வறுவல் தயார்.

Categories

Tech |